கிரிக்கெட்டிலும் நிறவெறி உள்ளது – மனம் திறந்த யூனிவர்சல் பாஸ்!

Last Updated: புதன், 3 ஜூன் 2020 (14:07 IST)

கிரிக்கெட்டிலும் நிறவெறி பேதங்கள் உள்ளதாகவும் அதை தான் அனுபவித்துள்ளதாகவும் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

அமரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின நபர் சாலையோரத்தில் வைத்து போலிஸாரால் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அமெரிக்கா முழுவதும் போராட்டம் அதிகமாகியுள்ளது. இந்த போராட்டங்களுக்கு அமெரிக்கா மட்டுமில்லாது உலகம் முழுவதும் ஆதரவு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் சூப்பர் ஸ்டாரான கிறிஸ் கெய்ல் அந்த போராட்டங்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். மேலும் கிரிக்கெட்டிலும் இதுபோல நிறவெறி உண்டு என்றும் அதை தான் அனுபவித்திருப்பதாகவும் கூறியுள்ளார். இது சம்மந்தமாக ‘மற்ற உயிர்களைப் போலவே கறுப்பின மக்களின் வாழ்க்கையும் முக்கியமானது.
நான் உலகம் முழுவதும் பயணம் செய்த போதும் என்னை நிற ரீதியாக நடத்துவதை உணர்ந்திருக்கிறேன். இனவாதம் கிரிக்கெட்டிலும் உண்டு. ஒரு கறுப்பின வீரனாக நான் அசமத்துவமாக நடத்தப்பட்டு இருக்கிறேன். Black and powerful. Black and proud’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :