1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 29 ஜூலை 2021 (07:59 IST)

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பதக்கம் வென்றால் பரிசுகள் என இந்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது
 
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு ரூபாய் 3 கோடியும் வெள்ளி பதக்கம் வெல்லும் வீரர்கள் வீராங்கனைகளுக்கு ரூபாய் இரண்டு கோடியும் வெண்கல பதக்கம் வெல்வது ஒரு கோடி ரூபாயும் வழங்கப்படும் என இந்தியன் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது 
 
ஏற்கனவே இதே போன்ற ஒரு அறிவிப்பை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழக வீரர்கள் வீராங்கனைகள் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் ரயில்வேயில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் 25 வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது