திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 28 ஜூலை 2021 (10:09 IST)

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 144 உயர்வு

சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும், இறங்கியும் வரும் நிலையில் இன்று தங்கம் விலை திடீரென சவரனுக்கு ரூபாய் 144 உயர்ந்துள்ளது
 
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 4520 என்றும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 36160 என்றும், விற்பனையாகி வருகிறது. அதேபோல் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4884 எனவும் ஒரு சவரன் ரூபாய் 39072 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தங்கம் விலை உயர்ந்தாலும் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது வெள்ளி ஒரு கிராம் விலை ரூ.71.40 என்றும், ஒரு கிலோ விலை ரூ.71400 என்றும் விற்பனையாகி வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் நீண்ட கால முதலீட்டிற்கு தங்கம் சிறந்தது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்