1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Olympics: Indian athlete qualifies for quarterfinals

ஒலிம்பிக் போட்டி: இந்திய வீரர்கள் காலிறுதிக்குத் தகுதி

பிரவீன் ஜாதவ்
ஒலிம்பிக்கில் வில்வித்தைப்போட்டியில் ரஷ்ய வீர கால்சன் பசார்சஃபோவை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் பிரவீன் ஜாதவ்  காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நேற்றுக் சமீபத்தில் தொடங்கியது. இதில் ,இந்தியா, சீனா, அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ,வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். 

சமீபத்தில், நடைபெற்ற மகளிர் பளுதூக்குதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட மீராபாய் இப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இவருக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்துகள் தெரிவித்து பேசினார். இந்திய மக்கள் வீராங்கனை மீரா பாய்க்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் இந்திய வீரர் பிரவீன் ஜாதவ்  காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் ரஷ்ய வீர கால்சன் பசார்சஃபோவை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி அவர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அதேபோல்  பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கணை சிந்து, சீன வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற்றியுள்ளார். பிவி, சிந்து மற்றும்  பிரவீன் இருவரும்  நிச்சயம் பதக்கம் வெல்வார் என இந்திய மக்கள் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர்.
 
About Writer
Sinoj