1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 ஜூன் 2022 (11:42 IST)

சுக்கிரன் உச்சத்தில்.. லக்குதான் மச்சத்தில்..! – இந்திய அணிக்கு ஜோசியர் நியமனம்!

Football
இந்திய கால்பந்து அணிக்கு பிரத்யேகமாக ஜோசியம் பார்க்க நிறுவனம் ஒன்றை இந்திய கால்பந்து கூட்டமைப்பு நியமித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கால்பந்து போட்டி தகுதி சுற்றில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற இந்திய கால்பந்து அணி ஆசியகோப்பை போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளது. ஆனால் இந்த முறை ஆசிய கோப்பைக்கு இந்தியா தகுதி பெற காரணமே கால்பந்து அணிக்காக நியமிக்கப்பட்ட ஜோதிட நிறுவனம்தான் என்று பேச்சு எழுந்துள்ளது.

ஆம், இந்திய கால்பந்து அணியின் வெற்றிகளை கணிக்கவும், மேலும் பல யூகங்களை வகுக்கவும் அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு ரூ.16 லட்சம் சம்பளத்தில் ஜோதிட நிறுவனம் ஒன்றை நியமித்துள்ளதாம். முதலில் இவர்களை “உற்சாகப்படுத்துபவர்கள்” என்று கூறி நியமித்ததாகவும் பின்னர்தான் அவர்கள் ஜோதிடர்கள் என்று தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்து பேசியுள்ள முன்னாள் இந்திய கால்பந்து அணி கோல்கீப்பர் தனுமொய் போஸ் “மாநிலங்கள்தோறும் கால்பந்து வீரர்கள் பலர் சரியான பயிற்சி பெற வசதிகள் இல்லாமல் தவிக்கின்றனர். இந்திய கால்பந்து கூட்டமைப்பு கடந்த சில ஆண்டுகளில் மாநில அணிகளுக்கான லீக், டோர்னமெண்ட் போன்றவற்றை சரியாக நடத்தவில்லை. இது கால்பந்து அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்” என வருத்தம் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் இந்திய கால்பந்து அணிக்கு நியமிக்கப்பட்ட அந்த உற்சாகப்படுத்துபவர்கள் நிறுவனம் சோதிட நிறுவனமா என்பது குறித்து இதுவரை இந்திய கால்பந்து சம்மௌனம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.