1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 20 ஜூன் 2022 (15:17 IST)

2வது போட்டியிலும் நெதர்லாந்தை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து!

netherland england
இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது 
 
இந்த தொடரில் கடந்த 17ஆம் தேதி முதல் போட்டி நடந்தபோது இங்கிலாந்து அணிக்கு 498 ரன்கள் குவித்து நெதர்லாந்தை அடித்து நொறுக்கியது 
 
இந்நிலையில் தற்போது இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது 
 
நேற்றைய போட்டியில் நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்த 7 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது 
 
236 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 36 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பின்றி 239 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டி வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது