ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 30 செப்டம்பர் 2021 (17:22 IST)

நீங்க நினைக்கிற ஆள் நான் இல்ல... டென்ஷன் ஆன இந்திய அணி கோல் கீப்பர்

பஞ்சாப் அரசியல் குறித்து இந்திய அணியின் கோல் கீப்பரான அமரிந்தர் சிங்கின் ட்விட்டர் கணக்குக்கு டேக். 

 
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் சித்துவுக்கு வெளிப்படையான மோதல் போக்கு இருந்து வந்தது. இதனிடையே அமரீந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து கடந்த 18 ஆம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து சித்துவின் ஆதரவாளரான சரன்ஜித் சிங் முதல்வராக பதவி ஏற்றார். சமீபத்தில் அம்மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த சித்துவும் ராஜினாமா செய்தார். 
 
இதனிடையே இது குறித்த கேள்விகளையும் கருத்துகளையும் தகவல்களையும் இந்திய அணியின் கோல்கீப்பரான அமரிந்தர் சிங்கின் ட்விட்டர் கணக்குக்கு டேக் செய்து கேட்டுள்ளனர். இதனால் அவர், அன்பான ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களே நான் இந்திய அணியின் கோல் கீப்பர் அமரிந்தர் சிங். பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் இல்லை. தயவு செய்து எனக்கு டேக் செய்ய வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.