திங்கள், 20 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2022 (20:14 IST)

4வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு 259 ரன்கள் இலக்கு கொடுத்த இலங்கை!

sri vs aus4
4வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு 259 ரன்கள் இலக்கு கொடுத்த இலங்கை!
கடந்த சில நாட்களாக இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன 
 
இதுவரை நடைபெற்ற 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. 
 
இந்நிலையில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பில் நடைபெற்று வருகிறது. 
 
இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 49 ஓவர்களில் 258 ரன்கள் எடுத்து உள்ளன. இதனை அடுத்து 259 என்ற இலக்கை நோக்கி தற்போது ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. 
 
சற்றுமுன் வரை ஆஸ்திரேலியா  18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது