1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (10:40 IST)

தொடர்ச்சியான 12 வெற்றிகள்… டி 20 போட்டிகளில் இந்தியா படைத்த சாதனை!

நேற்று இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியையும் வென்ற இந்தியா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.

உலகக்கோப்பைக்கு பின்னர் நடந்த அனைத்து டி 20 தொடரையும் இந்திய அணி முழுமையாக வென்றுள்ளது. சொந்த மண்ணில் நியுசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை ஆகிய அணிகளை வொயிட்வாஷ் செய்துள்ளது. இதன் மூலம் கடைசியாக விளையாடிய 12 போட்டிகளையும் வெற்றி பெற்று புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் மற்றும் ருமேனியா ஆகிய அணிகள் இதுபோல தொடர்ச்சியாக 12 வெற்றிகள் பெற்றுள்ளன. அந்த சாதனையை இப்போது இந்தியா சமன் செய்துள்ளது.