வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 28 ஜூலை 2024 (12:47 IST)

இரு நகரங்கள் இடையே விமான கட்டணம் வெறும் ரூ.150 தான்.. அதுவும் இந்தியாவில்..!

Flight
இந்தியாவில் உள்ள இரண்டு நகரங்கள் இடையே விமான கட்டணம் வெறும் 150 ரூபாய் என்று தகவல் வெளியாகி உள்ளன.

பொதுவாக விமான கட்டணம் என்பது அதிகமாக இருக்கும் என்பதும் பேருந்து, ரயிலில் செல்லும் கட்டணத்தை விட பல மடங்கு இருக்கும் என்பதும் தெரிந்தது. ஆனால் கெளஹாத்தி , ஷில்லாங் ஆகிய இந்த இரு நகரங்களுக்கு இடையே செல்ல விமான கட்டணம் வெறும் 150 ரூபாய் என்று அலையன்ஸ் ஏர் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது

 இந்த இரு நகரங்களுக்கு இடையே உள்ள தூரம் மிகவும் குறைவாக இருக்கும் நிலையில் அடிப்படை விமான கட்டணம் 400 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சில குறிப்பிட்ட ப்ரோமோ கோடு எண்ணை பயன்படுத்தினால் 250 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும் என்றும் அதன் மூலம் விமான கட்டணம் வெறும் 150 ரூபாயாக மாறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு செய்வதற்கு தனியாக கட்டணங்கள் வசூலிக்கப்படும்

கெளஹாத்தி , ஷில்லாங் ஆகிய இரு நகரங்களிடையே வெறும் 99 கிலோமீட்டர் மட்டுமே இருப்பதால் மிகவும் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் எனவே இந்த இரு நகரங்களுக்கு நகரங்கள் இடையே விமான பயணம் செய்பவர்கள் 150 ரூபாய் மட்டும் செலுத்தி பயணம் செய்யலாம் என்றும் அலையன்ஸ் ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது.

Edited by Siva