வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (11:59 IST)

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே 3 வது ஒருநாள் போட்டி : தொடரை வெல்லப் போவது யார் ?

மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
சென்னையில் நடத்த முதலாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அபாரமாக விளையாடி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
 
இரண்டாவது போட்டியில் இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.எனவே இரு அணிகளும் தலா 1- 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
 
இந்நிலையில், இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி  ஒடிசா மாநிலம்  கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் எந்த அணி கோப்பையை கைப்பற்றப் போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.