புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (19:53 IST)

இந்தியா-தென்னப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட்: மழையால் போட்டி ரத்து!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது என்பது தெரிந்ததே. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் முடிவடைந்த நிலையில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. 
 
 
இந்த நிலையில் தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணியும், இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இன்று இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது டி20 போட்டி சூரத் நகரில் நடைபெற இருந்தது. ஆனால் இன்று காலை முதல் தொடர்ந்து சூரத்தில் மழை பெய்து வந்ததால் இந்த போட்டி ஒரு பந்துகூட வசப்படாமல் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
ஏற்கனவே நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான 2 டி20 போட்டிகளில் இந்திய மகளிர் அணி மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணி தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
மேலும் இரு அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி வரும் அக்டோபர் 1ஆம் தேதியும், 5வது டி20 போட்டி அக்டோபர் 4ஆம் தேதியும் நடைபெறும் என்பதும் இந்த இரு போட்டிகளும் சூரத் நகரிலேயே நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது