1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated: செவ்வாய், 11 ஜனவரி 2022 (18:25 IST)

4 விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா: விராத் கோஹ்லி நிதான ஆட்டம்!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சற்று முன் வரை 4 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தென்னாபிரிக்காவின் கேப் டவுன் நகரில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது 
 
ஆரம்பத்திலேயே கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் விக்கெட்டுக்களை இழந்த இந்தியா பின்னர் பொறுமையாக விளையாடி வருகிறது. அதன் பின் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர்களின் விக்கெட்டுகளும் பறிபோனதை அடுத்து கேப்டன் விராத் கோலி நிதானமாக விளையாடி வருகிறார். அவர் 123 பந்துகளில் 38 ரன்கள் எடுத்துள்ளார் என்பதும் ரிஷப் பண்ட் 10 ரன்களுடன் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சற்று முன் வரை இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்துள்ளது என்பது கூறப்பட்டது