செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 11 ஜனவரி 2022 (16:40 IST)

பிரபல இந்திய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா..ரசிகர்கள் அதிர்ச்சி

இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்குக் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரொனா 2 வது அலை பரவி வரும் நிலையில்,  தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் தற்போது அனைத்து நாடுகளிலும் வேகமாகப் பரவி வருகிறது.   

இந்நிலையில்  தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

வாஷிங்டன் சுந்தர் கொரொனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய வேண்டுமென ரசிகர்கள்  பிரார்த்தனை செய்து வருகின்றனர்.