செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 11 ஜனவரி 2022 (15:14 IST)

மூன்றாவது டெஸ்ட்: ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று உள்ள நிலையில் இன்று கேப்டவுனில் 3வது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது
 
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில் அடுத்தடுத்த ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது
 
தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் 12 மற்றும் 15 ரன்களில் அவுட் ஆகி உள்ளனர். இதனை அடுத்து தற்போது புஜாரா மற்றும் கேப்டன் விராத் கோலி ஆகிய இருவரும் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த டெஸ்ட் போட்டியில் வெல்லும் அணியே இந்த தொடரை வெல்லும் அணி என்பதால் இரு அணிகளும் இந்த போட்டியை வெல்ல தீவிரமாக முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது