1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated: வெள்ளி, 19 நவம்பர் 2021 (16:24 IST)

இந்தியா - நியூசிலாந்து இடையே 2வது டி20 போட்டி: இந்தியாவின் வெற்றி தொடருமா?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது ஒரு டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே
 
முதல் டி20 போட்டியில் ஒரு கட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில் 19.4 ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற உள்ளது. தல தோனி அவர்களின் சொந்தமான இந்த மைதானத்தில் இந்திய அணி தனது வெற்றியை தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இன்று இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது