வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 நவம்பர் 2021 (11:03 IST)

ஆடை மேல் தொட்டாலும் அது வன்கொடுமைதான்! போக்சோதான்! – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆடை மேல் தொட்டு செய்யும் பாலியல் சீண்டல்கள் போக்சோவில் வராது என்ற மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் சில மாதங்கள் முன்னதாக மும்பை உயர்நீதிமன்றம் இளம்பெண்கள், சிறுமிகள் மீது ஆடைமேல் தொட்டு செய்யும் பாலியல் சீண்டல்களுக்கு போக்சோ சட்டத்தில் வழக்கு தொடர முடியாது என உத்தரவிட்டிருந்தது.

இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணையில் இன்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ஆடைமேல் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டாலும் அதுவும் போக்சோ சட்டத்தின் கீழ் வரும் என கூறி மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.