திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 நவம்பர் 2021 (08:43 IST)

இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் உரை! – என்ன பேசப்போகிறார்?

பிரதமர் மோடி இன்று காலை 9 மணியளவில் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இருந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்துவது மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு பிரதமர் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. பிரதமர் மோடி இந்தியாவில் கொரோனா நிலவரம் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதில் பேசலாம் என்றும், மேலும் வேறு சில புதிய அறிவிப்புகளும் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.