தடுப்பூசி போட்டிருந்தால் தனிமைப்படுத்தல் இல்லை! – இந்தியர்களுக்கு சிங்கப்பூர் சலுகை!
இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ள இந்தியர்களுக்கு தனிமைப்படுத்தலில் தளர்வுகள் அளிப்பதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு பல்வேறு நாடுகளில் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
சமீபத்தில் இந்தியாவில் இந்த தனிமைப்படுத்தலில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது சிங்கப்பூர் வரும் இந்தியர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய இந்தியர்களுக்கே பொருந்தும். இந்த தளர்வுகள் எதிர்வரும் 29ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.