1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Bumrah may be rested in Bangladesh test series

பும்ராவுக்கு வங்கதேச தொடரில் ஓய்வளிக்க முடிவா?.. பின்னணி என்ன?

இந்தியா
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக பும்ரா இருந்து வருகிறார். டெஸ்ட், டி 20 மற்றும் ஒருநாள் என மூன்று வகையான போட்டிகளிலும் இப்போது இருக்கும் வேகப்பந்துவீச்சாளர்களில் பும்ராதான் நம்பர் 1 பவுலர் என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் சொல்லலாம்.

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் ஜாஸ்ப்ரீத் பும்ரா. அனைத்து போட்டிகளிலும் சிறப்பான பவுலிங்கின் மூலம் அணிக்கு வெற்றியை தேடித்தந்த அவர் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

அதன் பின்னர் நடந்த ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான தொடரில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள வங்கதேச தொடரிலும் அவருக்கு ஓய்வளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் அடுத்து வரும் நியுசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் முழுமையாக விளையாடவேண்டும் என்பதால் இந்த முடிவை பிசிசிஐ எடுக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
ரோஹித், கோலி இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார்கள்… ஹர்பஜன் சிங் பதில்!