1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. India vs australia second odi score

67 ரன்களுக்கு 5 விக்கெட்: திணறும் இந்திய பேட்ஸ்மேன்கள்..!

இந்தியா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இன்று இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்றதை அடுத்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது 
 
இந்திய அணியின் பேட்மேன்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்ததால் சற்றுமுன் இந்தியா 67 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது. 
 
விராட் கோலி 31 ரன்களுடனும் ஜடேஜா 9 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். இந்திய அணியின் சுப்மன் கில், சூர்யா குமார் யாதவ் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும் ஹர்திக் பாண்டியா ஒரே ஒரு ரன்னிலும் அவுட் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
117 ரன்களுக்கு சுருண்ட இந்தியா.. கடைசி 9 பந்துகளில் 3 விக்கெட்..!