சதத்தை நோக்கி கே.எல்.ராகுல்.. மீண்டும் ஏமாற்றிய ரோகித் சர்மா.. ஸ்கோர் விவரங்கள்..!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கே. எல். ராகுல் மட்டும் தனி நபராக போராடி வரும் நிலையில், மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பி வருகின்றனர்.
டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து இந்திய அணி களத்தில் இறங்கியது.
ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகிய நான்கு விக்கெட்டுகள் நேற்று விழுந்த நிலையில், இந்திய அணி 51 ரன்கள் மட்டுமே நேற்றைய ஆட்ட நேர முடிவில் எடுத்திருந்தது.
ரோகித் சர்மா சிறிது நேரத்திலேயே அவுட் ஆகிய நிலையில், கே. எல். ராகுல் 83 ரன்களுடன் விளையாடி வருகிறார். அவர் சதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரவீந்திர ஜடேஜாவும் நிதானமாக விளையாடி, 26 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
சற்று முன், இந்திய அணி 41 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி இன்னும் 305 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் அதாவது நாளையுடன் இந்த கிரிக்கெட் டெஸ்ட் போட்டி முடிவடையும் நிலையில் இன்னும் ஒரு இன்னிங்ஸ் கூட முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Siva