3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியாவின் ஸ்கோர் என்ன? நம்பிக்கை நட்சத்திரமாக கே.எல்.ராகுல்..!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் சற்றுமுன் முடிவடைந்தது. இன்றைய ஆட்ட நேர முடிவில், நான்கு விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 51 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல். ராகுல் நம்பிக்கை நட்சத்திரமாக ஆட்டம் இழக்காமல் 33 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில், ஆஸ்திரேலியா அணி அபாரமாக விளையாடி 445 ரன்கள் குவித்தது. ஸ்மித் மற்றும் ஹெட் இருவருமே சதம் அடித்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்தது. ஜெய்ஸ்வால், கில், விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரோகித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் இருவரும் தற்போது களத்தில் உள்ளனர்.
இன்னும் ஜடேஜா என்ற ஒரே பேட்ஸ்மேன் மட்டுமே வெளியே இருக்கும் நிலையில் இந்தியா 394 ரன்கள் பின்னடைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை நட்சத்திரமான கே.எல். ராகுல் நிதானமாக விளையாடி 33 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய பந்துவீச்சை பொறுத்தவரை, ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகளையும் ஹாசில்வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran