திங்கள், 16 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: திங்கள், 16 டிசம்பர் 2024 (16:08 IST)

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

திறமை இருந்தும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டும் பிருத்வி ஷா இந்திய அணியில் தன்னுடைய இடத்தைத் தக்கவைக்க முடியாமல் தடுமாறுகிறார். சில ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பிருத்வி ஷா இந்திய அணியில் எடுக்கும் போது சொதப்புகிறார். அதே போல ஐபிஎல் போட்டிகளிலும் பிரித்வி ஷா சீரான ஆட்டத்திறனை வெளிப்படுத்த தவறிவருகிறார்.

அது மட்டுமில்லாமல் உடல் எடைப் பெருகி அவர் சுணக்கமாகக் காணப்படுகிறார் என்ற விமர்சனமும் உள்ளது. இதனால் இந்தமுறை ஏலத்தில் அவர் எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை. அவரும் அவரைப் பற்றிக் குறிப்பிடும் வார்த்தை ‘வீணடிக்கப்பட்ட திறமையாளர்’ என்பதுதான்.

இந்நிலையில் பிரித்வி ஷா குறித்து அவர் விளையாடிய மும்பை அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசும்போது “பிரித்வி ஷா கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட வீரர் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவரிடம் அவ்வளவு திறமைகள் உள்ளன. அவர் மட்டும் சில விஷயங்களில் முன்னேறினால் அவருக்கு அதன் பிறகு வானம்தான் எல்லை. கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்பு சில விஷயங்களில் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும். குழந்தை போல அருகில் சென்று சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.