1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 30 டிசம்பர் 2024 (07:26 IST)

340 டார்கெட்.. ஆனால் 3 விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி.. டிரா செய்ய முடியுமா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா 340 ரன்கள் இலக்கு கொடுத்துள்ளது. இதற்கிடையில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 26 ஆம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி முதலில் 474 ரன்கள் குவித்தது. இரண்டாவது இன்னிங்சில் அவர்கள் 234 ரன்கள் சேர்த்தனர். பும்ரா அபாரமாக பந்துவீசி, முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
 
இந்த நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்தது. வெற்றிக்காக இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 340 ரன்கள் தேவைப்படுவதாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
 
தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. கேப்டன் ரோஹித் சர்மா வழக்கம்போல் 9 ரன்களில் அவுட்டாகி விட்டார். கே.எல்.ராகுல் ரன் ஏதும் எடுக்காமலும், விராத் கோஹ்லி 5 ரன்களிலும் அவுட்டானார்கள். மேலும், இன்னும் 33 ரன்களில் மூன்று முக்கிய விக்கெட்டுகள் விழுந்துள்ளன. தொடக்க ஆட்டக்காரர் ஜெயஸ்வால் மட்டுமே போட்டியை டிரா செய்ய போராடி கொண்டு உள்ளார்.
 
 
 
Edited by Siva