1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ashwin picks up kuhnmenn wicket early

முதல் விக்கெட்டை சாய்த்த அஸ்வின்… ஆஸி அணி தடுமாற்றம்!

இந்தியா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 571 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி உள்ளது. விராட் கோலி மிகவும் அபாரமாக விளையாடி 186 ரன்கள் அடித்துள்ளார். கடைசி கட்டத்தில் கோலி, இரட்டை சதத்தை மிஸ் செய்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஆஸ்திரேலியா அணியை விட 91 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில், இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று காலை ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே நைட் வாட்ச்மேனாக இறங்கிய குன்னமேனை அஸ்வின் அவுட் ஆக்கி வெளியேற்றினார். ஆஸி. பேட்ஸ்மேன்கள் மிகவும் டிபன்ஸிவ்வாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது வரை ஆஸி அணி 17 ரன்கள் சேர்த்து 1 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்: இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி..!