1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 12 மார்ச் 2023 (16:45 IST)

அகமதாபாத் டெஸ்ட்டில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர். இரட்டை சதத்தை மிஸ் செய்த விராத்..!

test
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 71 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி உள்ளது. விராட் கோலி மிகவும் அபாரமாக விளையாடி 186 ரன்கள் அடித்துள்ளார். 
 
ஆஸ்திரேலியா அணி இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 480 ரன்கள் அடித்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் சுப்மன் கில் அபாரமாக விளையாடி 128 ரன்கள் அடித்த நிலையில் விராட் கோலி 186 ரன்கள் அடித்தார். அவர் 14 ரன்களில் இரட்டை சதத்தை மிஸ் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்திய அணி 571 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணியை விட 91 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு நாள் ஆட்டம் முடிவடைந்து உள்ள நிலையில் இப்பொழுது தான் முதல் இன்னிங்ஸ் முடிவடைந்த நிலையில் இந்த போட்டி டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva