ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட்: ஒரே குரூப்பில் இந்தியா-பாகிஸ்தான்
ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் ஒரே குரூப்பில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருக்கும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் செயலாளர் ஜெய்ஷா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளுமே ஏ குரூப்பில் இருக்கும் என்றும் இலங்கை வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளும் பி குரூப்பில் இருக்கும் என்றும் ஏ குரூப்பில் உள்ள மூன்றாவது அணி குவாலிஃபை முறையில் தேர்வு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும் என்பதால் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா பாகிஸ்தான் போட்டி உறுதி என்பது தெரிய வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran