1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. America give visa to indian students

இந்திய மாணவர்களுக்கு அதிக விசா வழங்கி சாதனை செய்த அமெரிக்கா!

visa
2022ஆம் ஆண்டில் அதிக விசா இந்திய மாணவர்களுக்கு வழங்கி அமெரிக்கா சாதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
2022ஆம் ஆண்டில் மட்டும் 1.25 லட்சம் இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா விசா வழங்கி உள்ளது. மேலும் 2023-ம் ஆண்டுக்குள் விசாக்களை பெறுவதில் சீனாவை இந்தியா மிஞ்சும் என்றும் கூறப்படுகிறது. 
 
மெக்சிகோ அடுத்து அதிக விசாக்களை பெறும் நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாவது இடம் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
விசா பெறுவதற்கான காத்திருப்பு நேரம் குறைவு மற்றும் எல் மற்றும் எச் பணியாளர்கள் விசாவை பெரும் விண்ணப்பதாரர் வசதிக்காக ஒரு லட்சம் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. 
 
வரும் காலங்களில் இன்னும் அதிக அளவில் அமெரிக்க இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கும் என்று கூறப்படுவதால் மேல்படிப்புக்காக இந்தியா செல்லும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் திட்டம்: அதிர்ச்சி தகவல்