ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 5 ஜனவரி 2023 (09:57 IST)

முதல் போட்டியில் 5 ரன்கள் அடித்த சஞ்சு சாம்சன் இலங்கை தொடரில் இருந்து விலகல்: புதிய வீரர் யார்?

sanju
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் நடந்த முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் முதல் போட்டியில் 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த சஞ்சு சாம்சன் காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜிதேஷ் ஷர்மா அணில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இந்திய அணி தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி புனே நகரில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடதக்கது
 
Edited by Siva