திங்கள், 10 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 பிப்ரவரி 2025 (15:28 IST)

2வது ஒருநாள் போட்டி.. இங்கிலாந்து நிதான ஆட்டம்.. விக்கெட் எடுத்த ஜடேஜா, வருண்..!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கட்டாக் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
 
தொடக்க ஆட்டக்காரர் சால்ட் 26 ரன்கள் அடித்த நிலையில், இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 65 ரன்கள் எடுத்தார். இதில் பல பௌண்டரிகள் அடங்கும். தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அவுட் ஆன பின்னர்  தற்போது ஜோ ரூட் மற்றும் ஹேரி ப்ரூக் ஆகிய இருவரும் பேட்டிங் செய்து வருகின்றனர்.
 
சற்று முன் வரை, இங்கிலாந்து அணி 27 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை, வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டை பெற்றுள்ளனர்.
 
இந்த தொடரில் ஏற்கனவே இந்திய அணி ஒரு போட்டியில் வென்றுள்ளது. இன்றைய போட்டியிலும் வென்றால், தொடரை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva