1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 5 ஜனவரி 2023 (14:36 IST)

செப்டம்பர் மாதம் நடக்கும் ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் மோதல்!

இந்த ஆண்டு இறுதியில் ஆசியக் கோப்பை தொடர் நடக்க உள்ளது. இதில் இந்திய அணி கலந்துகொள்ளுமா என்ற சந்தேகம் நிலவி வருகிறது.

ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடந்தது. இதில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து அடுத்த ஆண்டு 50 ஓவர் போட்டியாக நடக்கும் எனவும், அது பாகிஸ்தானில் நடக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டும் மோதுகின்றன. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடந்தால் இந்திய அணி அங்கு செல்லாது என்றும், மாறாக ஆசியக் கோப்பை வேறு ஒரு பொதுவான நாட்டுக்கு மாற்றப்படலாம் எனவும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது ஆசியக் கோப்பை செப்டம்பர் மாதம் நடக்கும் எனவும், அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளதாகவும், அதனால் லீக் சுற்றில் இரு அணிகளும் மோத உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.