தொடர்புடைய செய்திகள்
- ராஞ்சி டி20 போட்டி: சாதனைகள் படைக்கவிருக்கும் இந்திய அணி!!
- டி20 போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் திடீர் விலகல்
- இலங்கை விமான நிலையத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க ராஜபக்சே எதிர்ப்பு
- செல்ஃபி மரணத்தில் முதலிடம் பிடித்த இந்தியா
- அடுத்த தாக்குதலில் அணு ஆயுத மையத்தை தகர்ப்போம்; பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை
டாஸ் வென்ற இந்தியா பவுலிங்; அனல் பறக்க களமிறங்கும் ஆஸ்திரேலியா
இந்திய ஆஸ்திரேலிய அணிகள் இடையே ராஞ்சியில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் அஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிவடைந்த பின் தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் விளையாடி வருகிறது. முதலாவது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்திய அணியில் அக்ஸருக்கு பதில் குல்தீப் இடம்பெற்றுள்ளார். ஒருநாள் போட்டியில் விலகி இருந்த தவான் தற்போது டி20 போட்டியில் களமிறங்கியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் காலை திடீரென தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகிக்கொண்டார். இதையடுத்து டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணியை வழி நடத்த உள்ளார்.
ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டி20 போட்டியிலும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தும் என் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
