அடுத்த தாக்குதலில் அணு ஆயுத மையத்தை தகர்ப்போம்; பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

Surgical Strike
Abimukatheesh| Last Updated: வியாழன், 5 அக்டோபர் 2017 (18:56 IST)
இந்தியாவின் அடுத்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் பாகிஸ்தானின் அணு ஆயுத மையத்தை தகர்க்க முடியும் என விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.

 

 
இந்திய விமானப்படை தளபதி தனோவா இன்று செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
 
இந்திய அரசு மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த முடிவு செய்தால், இந்திய விமானப்படையால் பாகிஸ்தானின் அணு ஆயுத மைத்தையும் தாக்க முடியும். பாகிஸ்தானுக்கு எதிரான சரிஜிக்கல் ஸ்டிரைக்கில் இந்திய விமானப்படையும் இடம்பெறும். முழு அளவிலான தாக்குதலுக்கு விமானப்படை தயார் நிலையில் உள்ளது என்றார்.
 
இந்தியா அமெரிக்காவின் ஆதரவோடு தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டை சீண்டி வருகிறது. காஷ்மீர் பகுதியை பாகிஸ்தானிடம் கைப்பற்ற முடியாத இந்தியா பாகிஸ்தானை தீவிரவாத நாடாக சித்தரித்து, பாகிஸ்தான் என்றாலே தீவிரவாதம் என்று இந்தியர்கள் எண்ணத்தில் விதைத்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :