1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (18:00 IST)

கீர்த்தி சுரேஷின் "மிஸ் இந்தியா" பட முதல் சிங்கிள் இதோ...!

தமிழ் , தெலுங்கு, இந்தி சினிமாவின் பிரபல நடிகையாக பார்க்கப்படும் கீர்த்தி சுரேஷ் மிஸ் இந்தியா என்ற படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர்  நரேந்தர்நாத் என்பவர் இயக்கி வரும் இப்படத்தை  ஈஸ்ட் கோஸ்ட் ப்ரோடக்ஷன் தயாரித்து வருகிறது. 
 
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. டீசரின் ஆரம்பத்தில் குடும்ப குத்துவிளக்காக காட்டப்படும் கீர்த்தி சுரேஷ் பின் மாடர்ன் பெண்ணாக காட்டப்படுகிறார். ஸ்லிம்மாக மாறி மாடர்ன் உடையில் மிளிரும் கீர்த்தி இப்படத்திற்கு பக்காவாக பொருந்தியிருக்கிறார். 
 
தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் " கொத்தகா  கொத்தகா" என்ற முதல் முதல் பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதோ அந்த பாடல் வீடியோ.