1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 26 மார்ச் 2021 (14:27 IST)

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு… இரண்டு விக்கெட்டை இழந்து தடுமாறும் இந்தியா!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று புனே மைதானத்தில் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில் இன்று இரண்டாவது போட்டி துவங்க உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் 4 ரன்களிலும் ரோஹித் ஷர்மா 25 ரன்களிலும்  ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். கேப்டன் கோலி இப்போது 7 ரன்களோடு களத்தில் உள்ளார். இந்தியா 37 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டை இழந்துள்ளது.