வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 26 மார்ச் 2021 (10:51 IST)

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடையில்லை! – மத்திய அரசு விளக்கம்!

உலக நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு நாடுகளும் தங்கள் மக்களுக்கு பல்வேறு நாடுகளின் வேறுப்பட்ட தடுப்பூசிகளை அளித்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த தடுப்பூசிகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் மேலும் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா அதிகரித்து வருவதால் தடுப்பூசிகளின் தேவை கருதி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்ததாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் அந்த தகவலில் உண்மையில்லை என மறுத்துள்ள மத்திய அரசு அடுத்த சில வாரங்களில் நேச நாடுகளுக்கு படிப்படியாக ஏற்றுமதி தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.