செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 12 ஜனவரி 2019 (12:35 IST)

தவான்-0, கோஹ்லி-3, ராயுடு -0 ; இந்தியா 13 ரன்னுக்கு 3 விக்கெட்

ஆஸ்திரேலியா நிர்ணயித்த 289 ரன்களைத் துரத்தும் இந்திய அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஷிகார் தவான் , கோஹ்லி மற்றும் அம்பாத்தி ராயுடு ஆகியோர் அவுட் ஆகியுள்ளனர்.

சிட்னியில் இன்று நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் போட்டியில் டாஸ் வெண்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. அந்த அணியின் கவாஜா(59), ஷான் மார்ஷ் (54), ஹான்ஸ்கோம்ப்(79) மற்றும் ஸ்டாய்னஸ் (47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸி வலுவான ஸ்கோரை எட்டியது. இந்திய தரப்பில் புவனேஷ்குமார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்களும் ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 289 ரன்கள் என்ற வலுவான இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆஸி வீரர் பெஹன்ரூஃப் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் தவான் எல்.பி.டபுள்யூ. முறையில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதையடுத்து வந்த இந்திய கேப்டன் கோஹ்லி ரிச்சர்ட்ஸன் பந்தில் 3 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கோஹ்லிக்குப் பின் வந்த ராயுடு அதே ஓவரின் 5 ஆவது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் எல்.பி.டபுள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.
அதையடுத்து ரோஹித் ஷர்மா 6 ரன்களோடும் தோனி இருவரும் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் போராடி வருகின்றனர்.