திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 12 ஜனவரி 2019 (08:07 IST)

டாஸ் வென்ற ஆஸி முதலில் பேட்டிங் – பூவி 100…

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான இருபது ஓவர் போட்டித் தொடர் சமனிலும் டெஸ்ட் தொடரை இந்தியாவும் வென்றுள்ளது. இதையடுத்து 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது.

சிட்னியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸில் வென்ற ஆஸி. கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சர்ச்சையில் சிக்கிய ஹர்திக் பாண்ட்யா மற்றும் ராகுல் இருவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஜடேஜாவும் தினேஷ் கார்த்திக்கும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவரும் ஆஸ்திரேலிய 8 ரன்னுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. புவனேஷ்குமார் வீசிய மூன்றாவது ஓவரில் பிஞ்ச் க்ளீன் போல்டு ஆகி வெளியேறினார். இது புவனேஷ்வர் குமாரின் 100 ஆவது விக்கெட்டாகும்.

இந்திய அணி விவரம்:-
விராட் கோஹ்லி,ரோஹித் ஷர்மா, ஷிகார் தவான், அம்பாத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி, ஜடேஜா, குல்தீப்,புவனேஷ்வர் குமார்,முகமது ஷமி, கலீல் அகமது.

ஆஸ்திரேலிய அணி விவரம் :-
ஆரோன் பிஞ்ச், அலெக்ஸ் கேரி, உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ்,பீட்டர் ஹான்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டாய்னஸ், க்ளன் மேக்ஸ்வெல்,நாதன் லயன்,பீட்டர் ஸிடில், ரிச்சர்ட்ஸன், பெகன்ரூஃப்,