செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 11 ஜனவரி 2019 (10:15 IST)

இந்தியா வரும் ஆஸ்திரேலியா – சென்னை ரசிகர்கள் அதிருப்தி…

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு பிப்ரவரி மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இரு அணிகளும் மோதும் போட்டிகள்  நடைபெறும் இடங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் ஒருநாள் போட்டியில் நாளை மறுநாள் தொடங்க உள்ளன. இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதில் ஐந்து ஒரு நாள் போட்டிகள், இரண்டு 20- 20 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி விளையாட உள்ளது.

இந்தப் போட்டிகள் நடைபெறும் இடத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஒரு நாள் போட்டிகள் முறையே ஹைதராபாத், நாக்பூர், ராஞ்சி, மொஹாலி, டெல்லி ஆகிய  நகரங்களிலும், 20 - 20 போட்டிகள்  பெங்களூரு , விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களிலும் நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளது.

7 போட்டிகள் கொண்ட இத்தொடரில் சென்னையில் போட்டிகள் எதுவும் நடக்காத்தால் சென்னை ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.