1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Sri lanka all out for 215 runs against india

215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இலங்கை… கலக்கிய சிராஜ் & குல்தீப் யாதவ்!

இந்தியா
இந்திய அணியின் பந்துவீச்சில் தாக்குப் பிடிக்க முடியாமல் இலங்கை அணி 215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்துவரும் இலங்கை அணி ஆரம்பத்தை சிறப்பாக தொடங்கிய போதும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

இந்நிலையில் 39.4 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 215 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்தியா சார்பாக குல்தீப் மற்றும் சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை அதிகபட்சமாகக் கைப்பற்றினர்.
அடுத்த கட்டுரையில்
இந்திய பவுலர்களின் தாக்குதலில் திணறும் இலங்கை பேட்ஸ்மேன்கள்!