1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 27 ஜனவரி 2023 (21:18 IST)

33 ரன்களுக்கு 3 விக்கெட்.. இலக்கை எட்ட திணறும் இந்தியா!

hardik
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்று இந்தியா முதலில் பந்து வீசியது
 
இதனை அடுத்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மிட்செல் 59 ரன்களும் கான்வெ 52 ரன்கள் அடித்தனர். இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
 
இந்த நிலையில் 177 என்ற இலக்கை நோக்கி விளையாடும் இந்திய அணி முதல் மூன்று விக்கெட்டுகளை மளமளவென இழந்து விட்டது. சுப்மன் கில், இஷான் கிஷான், ராகுல் திரிபாதி ஆகிய மூவரும் அவுட் ஆகிய நிலையில் தற்போது சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் விளையாடி வருகின்றனர்.
 
இன்னும் 91 பந்துகளில் 144 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 
Edited by Siva