1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2023 (18:07 IST)

வெறிநாய் கடித்து 20 ஆடுகள் பலி...

GOATS
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வாகைக்குளம் என்ற கிராமம் உள்ளது.

இங்கு வசிக்கும் பால்பான்டி, இருளாண்டி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் கால் நடை விவசாயிகளாக உள்ள நிலையி, ஆடுகளை வைத்துக் கிடை போட்டு இருந்தனர்.

இவர்கள்  ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று மாலையில் இடையில் அடைத்து வைப்பர்.  நேற்று வழக்கம் போல ஆடுகளை இடையில் அடைத்து வைத்தனர்.

பின்னர் வந்து பார்த்தபோது, அதில் 20  செம்மறி ஆட்டுக்குட்டிகள் காயங்களுடன் இறந்து கிடந்தன.

வெறிநாய்கள் கடித்து இறந்துள்ளதாக அவர்களுக்கு தகவல் தெரிந்ததும், இதுகுறித்து, பால்பாண்டி மற்றும் இருளாண்டி இருவரும் பேரூராட்சிக்கும் காவல்  நிலையத்திலும் புகாரளித்தனர்.

இறந்த ஆட்டுக்குட்டிகளின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்,  இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.