500 புதிய விமானங்கள், ரூ.3300 கோடி முதலீடு.. ஏர் இந்தியா அதிரடி முடிவு!
500 புதிய விமானங்களை களம் இறக்க ரூ.3300 கோடியை புதிய முதலீடு செய்யவும் ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை பெற்ற டாடா குழுமம் தற்போது வெற்றிகரமாக அந்நிறுவனத்தை நடத்திவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஏர் இந்தியாவை மேலும் விரிவுபடுத்த இதுவரை இல்லாத அளவிற்கு புதிய வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக 500 புதிய விமானங்களை வாங்க முடிவு செய்திருப்பதாகவும் இதற்காக நிறுவன ரூபாய் 3300 கோடி புதிய முதலீடு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதற்கட்டமாக போயிங் உள்பட ஒரு சில நிறுவனங்களுடன் விமானங்கள் வாங்க ஏர் இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
Edited by Siva