திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 28 ஆகஸ்ட் 2021 (21:00 IST)

3வது டெஸ்ட் போட்டி: இந்தியா இன்னிங்ஸ் தோல்வி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் இன்று முடிவடைந்த நிலையில் இந்த போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வி அடைந்துள்ளது
 
இந்த போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 78 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 278 மட்டுமே எடுத்தது என்பதும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 432 ரன்கள் எடுத்தது அடுத்து அந்த அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் 5 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் என்று இந்திய அணி இருந்த நிலையில் அடுத்த 39 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் மடமடவென விழுந்துவிட்டது இந்திய அணியின் இன்னிங்ஸ் தோல்வி காரணமாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் செப்டம்பர் 2ம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் ஓவல் மைதானத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது