செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 28 ஆகஸ்ட் 2021 (16:57 IST)

இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி இந்தியா! 7 விக்கெட் இழந்து தடுமாற்றம்!

இந்திய அணி நான்காம் நாளிலேயே போட்டியை முடிவுக்கு கொண்டுவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி மிக அபாரமாக விளையாடி 432 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். இந்த நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சுதாரித்து நிதானமாக விளையாட ஆரம்பித்தது. நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி 211 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருந்தது. புஜாரா 91 ரன்களுடனும் கோலி 44 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே புஜாரா 91 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவருக்கு பின்னர் சற்று நேரம் நின்று விளையாடிய கோலியும் அரைசதம் அடித்த பின்னர் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.  பின்னர் இன்று ஆட வந்த ரஹானே, பண்ட் மற்றும் முகமது ஷமி ஆகியோரும் ஒற்றை இலக்க எண்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். தற்பொது இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து 256 ரன்கள் சேர்த்து 98 ரன்கள் பின்னிலை தங்கி உள்ளது. அதனால் இன்னிங்ஸ் தோல்வியை தடுப்பதே சிரமமாகியுள்ளது.