செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 28 ஆகஸ்ட் 2021 (17:08 IST)

மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்... வைரலாகும் மீம்ஸ்

கடந்த வருடம் சீனாவில் இருந்து கொரொனா தொற்று இந்தியா உள்ளிட்ட  உலக நாடுகளுக்குப் பரவியது.

கொரொனா முதல் முடிந்து தற்போது இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மூன்றாவது அலை செப்டம்பரில் பரவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

நாட்டில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து விழிப்புணர்வூட்டி வருகிறது.

எனவே தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் கல்லூரிகள் அனைத்து அரசு அறிவித்துள்ள சுழற்சிமுறைகளின் படி, வழிகாட்டுநெறிமுறைகளைப்பின் பற்றி வகுப்புகள் நடக்கவேண்டுமெனக் கூறியுள்ளது.

அதெபோல் டெல்லியில் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் 6-8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து டெல்லி யூனியர் பிரதேச அரசு கூறியுள்ளதாவது:  டெல்லியில் செப்டம்பர், 1 ஆம் தேதி முதல் 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான பள்ளிஅக்ள் திறக்கப்படும் எனவும்,  செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இன்று இணையதளத்தில் மீண்டும் பள்ளிக்குச் செல்லலாம் என்ற மீம்ஸ் வைரலாகி வருகிறது.

இதில், பள்ளிகள் குறித்து விதவிதமான சுவாரஸ்யமான பதிவுகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.