ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவின் 19 வயது வீராங்கனைக்கு வெண்கல பதக்கம்..!
கடந்த சில நாட்களாக சீனாவில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் இன்று நடைபெற்ற மல்யுத்த போட்டியில் இந்தியாவின் அன்டிம் மகளிர்களுக்கான 53 கிலோ கிராம் ஃப்ரீஸ்டைல் எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் மங்கோலியா நாட்டின் போலோர்டுயா பாட் ஓசீரை எதிர்கொண்ட நிலையில் 3-1 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
இந்த நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மொத்தம் 21 தங்கம், 32 வெள்ளி மற்றும் 33 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 86 பதக்கங்களை வென்று த்துடன் 4வது இடத்தில் உள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டி சீனா 176 தங்கம், 96 வெள்ளி, 53 வெண்கலம் என மொத்தம் 325 பதக்கங்களுடன் முதலிடத்திலும், ஜப்பான் 40 தங்கம், 51 வெள்ளி மற்றும் 59 வெண்கலம் என மொத்தம் 150 பதக்கங்களுடன் 2வது இடத்திலும் தென்கொரியா 33 தங்கம், 47 வெள்ளி, 74 வெண்கலம் என மொத்தம் 154 பதக்கங்களை வென்று 3வது இடத்திலும் உள்ளன.
Edited by Mahendran