#AsiaGames2023: ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம்
இன்றைய போட்டியில், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால் சிங்இணை தங்கம் வென்றுள்ளது.
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 24 ஆம் தேதி முதல் சீனாவில் ஹாங்சோ நகரில் நடந்து வருகிறது. இப்போட்டியில் இந்தியா, சீனா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன.
இப்போட்டிகள் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஏற்கனவே, இந்திய வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்து பல போட்டிகளில் தங்கம்., வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று வருகின்றனர்.
நேற்றைய போட்டியில், ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். அதாவது 88.88 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து முதலிடம் பெற்ற நீரஜ் சோப்ரா, கிஷோர் ,ஜேனா முறையே தங்கம், வெள்ளி வென்றனர்.
இந்த நிலையில், இன்றைய போட்டியில், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால் சிங்இணை தங்கம் வென்றுள்ளது.
இவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.