வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 5 அக்டோபர் 2023 (15:35 IST)

WorldCup-2023 : உலகக்கோப்பை முதல் போட்டி தொடக்கம் ! நியூசிலாந்து அதிரடி முடிவு

Icc World cup 2023
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் இன்று நடைபெறும் நிலையில்,  இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,  இதற்கான 10 நாட்டு  அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு,   உலகக்கோப்பைகான அனைத்து நாட்டு வீரர்களும் அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பயிற்சி ஆட்டம் முடிந்து உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ள  இத்தொடரின் முதல் போட்டி இன்று குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திரமோடி மைதானத்த்ல் நடைபெறுகிறது.

இன்றைய போட்டியில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

இந்த முதல் போட்டியில் யார் ஜெயிப்பர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.